×

மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன்? : ஐகோர்ட் காட்டம்

மதுரை : மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் வீரமுத்துப்பட்டியில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சேஷசாயி, வடமலை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

அவர்கள், “மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி பெற்றத் தரக்கோரி மக்கள் பிரதிநிதிகளிடம் ஏன் முறையிடவில்லை?. எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் மனு அளித்து நிவாரணம் பெற வேண்டியதை நீதிமன்றம் வரை கொண்டு வருவதா?. கால்பந்து விளையாட்டில் உள்ள நடுவரை போல் நீதிமன்றம் செயல்படுகிறது: கால்பந்து விளையாட்டில் விதிமீறல் உள்ளதா என்பதை கண்காணிப்பதே நீதிமன்றத்தின் பணி. கால்பந்து நடுவர் வீரருக்கு ஆதரவாக கால்பந்தை உதைக்க இயலாது. மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன்?,” என சரமாரி கேள்விகளை அடுக்கினர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

The post மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன்? : ஐகோர்ட் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Icourt Kattam ,Madurai ,High Court ,ICourt ,Manchuvirattu ,Veeramuthupatti, Sivagangai district ,Dinakaran ,
× RELATED சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும்...